புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

27 ஆக., 2018

அவுஸ்ரேலியாவில் முதலைகளுக்கு நடுவில் சிக்கித்தவிக்கும் சட்டவிரோத குடியேற்றவாசிகள்!

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள முதலைகள் நிறைந்த காட்டிற்குள் சிக்கியுள்ள சட்டவிரோத குடியேற்றவாசிகளை மீட்கும் நடவடிக்கையில் அவுஸ்திரேலிய காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

முதலைகள் நிரம்பிய டையின்பொரஸ்ட் என்ற சதுப்பு நிலக்காட்டிற்குள் அகதிகள் சிக்குண்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட குழுவினருடன் இணைந்து அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 15 பேரை கைதுசெய்துள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
குயின்ஸ்லாந்தின் டெயின்டிரீ ஆற்றுபகுதியில் படகொன்று தடுமாறிக் கொண்டிருப்பதை பார்த்த உள்ளுர் மக்கள் அதிகாரிகளிற்கு தெரியப்படுத்தியுள்ளனர். அதனையடுத்து அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள முதலைகள் நிறைந்த காட்டிற்குள் சிக்கியுள்ள சட்டவிரோத குடியேற்றவாசிகளை மீட்கும் நடவடிக்கையில் அவுஸ்திரேலிய காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.