புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஆக., 2018

தமிழ்மக்களின் காணிகளை ஆக்கிரமிக்க இடமளியேன்! - ஜனாதிபதி உறுதி


முல்லைத்தீவில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை ஊடாக ஆக்கிரமிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும், அவ்வாறு ஏதாவது நடவடிக்கை இடம்பெற்றால் தான் அதனை உடனடியாக தடுத்து நிறுத்துவதாகவும் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தேவையென்றால் தானும் அப்பகுதிக்கு நேரில் வந்து மக்களைச் சந்திக்க தயாராகவிருப்பதாகவும் கூறியுள்ளார்.

முல்லைத்தீவில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை ஊடாக ஆக்கிரமிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும், அவ்வாறு ஏதாவது நடவடிக்கை இடம்பெற்றால் தான் அதனை உடனடியாக தடுத்து நிறுத்துவதாகவும் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தேவையென்றால் தானும் அப்பகுதிக்கு நேரில் வந்து மக்களைச் சந்திக்க தயாராகவிருப்பதாகவும் கூறியுள்ளார்.

வட, கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் கூட்டம் நேற்று மாலை ஜனாதிபதியின் இல்லத்தில் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நேற்றைய கூட்டம் வடகிழக்கு அபிவிருத்தி தொடர்பாக பல்வேறு விடயங்கள் குறித்தும் ஆராயப்பட்ட போது, தற்போது முல்லைத்தீவில் மகாவலி எல் வலயத்திற்காக தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை மகாவலி அபிவிருத்தி அதிகார சபை சுவீகரித்து அவற்றை அப்பகுதியில் தமிழர் காணிகளில் அத்துமீறி குடியேறிவரும் சிங்களவர்களுக்கு வழங்குவதாகவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முல்லைத்தீவில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெறவுள்ளதாகவும் இந்த நிலைமை மிக மோசமடைவதால் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் பெரிதும் பாதிக்கப்பட்டு நல்லாட்சியின் கருப்பொருளே கேள்விக்குறியாவதாகவும் தெரிவித்த சிறிதரன் எம்.பி, அப்பகுதியின் அண்மைக்கால நிலைமைகள் குறித்து சுருக்கமாக ஜனாதிபதிக்கு தெரிவித்தார்.

இது குறித்து உடனடியாக தான் கவனம் செலுத்துவதாகக் கூறிய ஜனாதிபதி, அவ்விடத்திலிருந்தே உடனடியாக மகாவலி அபிவிருத்தி அதிகார சபைத் தலைவருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதுடன், அங்கு என்ன நடக்கின்றதெனவும் தமிழர்களது காணிகள் அத்துமீறி குடியேறியோருக்கு வழங்கப்படுகின்றதா என கேள்வி எழுப்பியதுடன் யாராது உத்தரவின் பேரில் இவை நடக்கின்றது எனவும் மகாவலி அதிகார சபையால் காணிகள் வழங்கப்பட முடியாதெனவும் கூறியதுடன் நாளை (இன்று) வந்து தன்னைச் சந்திக்குமாறும் பணிப்புரை விடுத்தார்.

இந்த நிலையில் அந்தப் பகுதியில் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையினர் தங்கள் விருப்பப்படி செயற்படுவதாகவும் தமிழ் மக்களின் காணிகளை சுவீகரித்து வருவதாகவும் சுட்டிக்காடட்டிய சிறிதரன் எம்.பி. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை (இன்று) அங்கு பாரிய ஆர்ப்பாட்ட பேரணி நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்தார். நான் அவ்வாறான காரியங்கள் எதனையும் செய்ய மாட்டேன் எனக் கூறிய ஜனாதிபதி வேண்டுமென்றால் தானும் முல்லைத்தீவுக்கு வருவதாகவும் அங்கு மக்களை சந்திக்க தயாராக இருப்பதாக தெரிவித்ததுடன் இந்த விடயத்தில் உறுதியான தீர்வொன்றை பெற்றுத் தருவதாகவும் கூறினார்.

இதன் போது, இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் முல்லைத்தீவில் தமிழர்களின் காணிகள் எவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றனவென்பதை ஜனாதிபதிக்கும் அங்கிருந்தோருக்கும் சுருக்கமாக எடுத்துக் கூறினார்.

ad

ad