புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 அக்., 2018

சிவசக்தி ஆனந்தன் உரையை தடுக்க முயன்ற சுமந்திரன் - சபையில் பரபரப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு இடையில் இன்று பாராளுமன்றத்தில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரனும் சிவசக்தி ஆனந்தனும் இன்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிவசக்தி ஆனந்தன் சபையில் அரசியல் உரையொன்றை மேற்கொள்கின்றார் என தெரிவித்து சுமந்திரன் அவர் உரையாற்றுவதை
தடுக்குமாறு பிரதி சபாநாயகரை கேட்டுள்ளார்.
இது சிறப்புரிமையுடன் தொடர்புபட்ட விடயம் எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
எனினும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் தன்னை உரையாற்ற அனுமதிக்கவேண்டும் என சிவசக்தி ஆனந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எனினும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சுமந்திரன் இலங்கை தமிழரசுக்கட்சி உறுப்பினர் உரையாற்றுவதற்கு என வழங்கப்பட்ட நேரத்தை  வழங்கப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.
இதன் போது குறுக்கிட்ட பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன சிவசக்தி ஆனந்தனிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளதுடன் பொது எதிரணி உரையாற்றுவதற்கு வழங்கப்பட்டுள்ள நேரத்தை சிவசக்தி ஆனந்தன் உரையாற்றுவதற்கு வழங்குவதற்கு முன்வந்துள்ளார்.

எனினும் சுமந்திரன் இதற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார், இதனை தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள பிரதிசபாநாயகர்    இந்த விவகாரம் குறித்து சபாநாயகருடன் பேசி இறுதிமுடிவையெடுப்பதாக தெரிவித்துள்ளார்.

ad

ad