21 அக்., 2018

மாகாண ஆளுநருக்கு தனித்து செயற்படும் அதிகாரம் இல்லை – மேல்மாகாண முதலமைச்சர்!

மேல் மாகாண சபைக்கான ஆசனங்கள் மற்றும் வளி தூய்மையாக்கி இயந்திரம் என்பன தொடர்பில் அண்மையில் கருத்து
வெளியிட்ட மேல்மாகாண ஆளுநர், குறித்த சொகுசு ஆசனங்களைக் கொள்வனவு செய்ய தாம் தடை விதித்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் இதுதொடர்பில் கொழும்பில் நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கிய போதே இசுரு தேவப்பிரிய இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட மேல்மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய, “ஆளுநர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுவதற்கு முன்னர் என்னுடனும், அமைச்சரவையுடனும் கலந்துரையாட வேண்டும்.
அரசியலமைப்புக்கு அமைய ஆளுநர், முதலமைச்சருடன் கலந்துரையாடி செயற்பட வேண்டும்“ என தெரிவித்துள்ளார்