புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 நவ., 2018

பாம்பன் - கடலூர் இடையில் கஜா புயல் கரையை கடக்கிறது!

கஜா புயல் இன்று நள்ளிரவு 11.30 மணி அளவில் பாம்பன் - கடலூர் இடையே புயல்
கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னைக்கு அருகே 300 கி.மீ., நாகைக்கு அருகே 300 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள கஜா புயல் இன்று நள்ளிரவு பாம்பன் - கடலூர் இடையே புயல் கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 80 முதல் 90 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். ராமேஸ்வரத்தின் அநேக இடங்களில் மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய கூடும்.

இதனால் சென்னைக்கு அதிகமான தாக்கம் இருக்காது. எனினும், சில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் கரையை கடக்கும் நேரத்தில் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். 

ad

ad