புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 நவ., 2018

அனந்தி ஊழல் - விசாரணைக் குழு அமைத்த ஆளுநர்

வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் பதவி வகித்த காலப் பகுதியில் அவரது மாகாண மகளிர்
விவகார அமைச்சினால் முறைகேடான முறையில் செலவழிக்கப்பட்ட 3 கோடி 20 இலட்சம் ரூபா பணம் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கு மூவர் அடங்கிய விசாரணைக்குழுவை வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே அமைத்துள்ளார்.

வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆளுநரிடம் விடுத்த எழுத்து மூலமான குற்றச்சாட்டுத் தொடர்பாக இந்த விசாரணைகள் நடைபெறவுள்ளன.

வடக்கு மாகாணச் சுகாதார அமைச்சின் செயலாளர் திருவாகரன், வடக்கு மாகாணக் கணக்காய்வுத் திணைக்களப் பணிப்பாளர் எஸ்.சுரேந்தினி, மாகாண சுகாதாரத் திணைக்களக் கணக்காளர் கஜேந்திரன் ஆகியோர் இந்த விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்.

எதிர்வரும் இரு வாரங்களுக்குள் விசாரணைகளின் அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு ஆளுநர் ரெஜினோல்ட் குரே விசாரணை குழுவுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறியால் பல்வேறு அமைச்சின் திணைக்களங்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட ஒரு தொகுதி நிதி வடக்கு மாகாண ஆளுநர் சுயேச்சை நிதியத்தின் வங்கி கணக்கில்
நிலையான வைப்பிலிடப்பட்டது. அதன் வட்டிப் பணத்திலிருந்து சிறுநீரகம் மற்றும் இதய சத்திர சிகிச்சை போன்ற நோய்களினால் வடக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவச் செலவுக்கு ஆளுநர் சுயேச்சை நிதியம் ஊடாக நிதி வழங்கப்பட்டு வந்தது.

ஆயினும் வடக்கு மாகாண சபை உருவாக்கப்பட்ட பின்னர் அதன் அனைத்து நிதிகளும் அந்தந்தத் திணைக்களங்களுக்கு மீள் அளிக்கப்பட்டது. மாகாணக் கணக்காய்வுக் கூட்டத்தில் இந்த நிதியைப் பொருத்தமான திட்டங்களுக்கு மாகாண சபையின் அனுமதியுடன் செயற்படுத்தவேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்தத் தீர்மானத்துக்கு மாறாக மகளிர் விவகார அமைச்சுக்கு வழங்கப்பட்ட நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உடனடி விசாரணைகளை
ஆளுநர் ரெஜினோல்ட் குரே ஆரம்பித்துள்ளார்.

ad

ad