இதனிடையே ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன் என்று ஜனாதிபதி நேற்றைய கூட்டத்தில் குறிப்பிடவில்லை என ஜனாதிபதிக்கு நெருக்கமான தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றில் பெரும்பான்மை உள்ளவர் ஆட்சி அமைக்க ஜனாதிபதி அனுமதிக்கவுள்ளதாகவும் சுதந்திர கட்சி உறுப்பினர்கள் கட்சி என்ற ரீதியிலேயே தீர்மானம் எடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியதாகவும் தெரியவருகின்றது.
இதனிடையே சுதந்திரக்கட்சியை சேர்ந்த 11 பேர் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் இணைய தயார் என அறிவித்துள்ளனர். ஆனால் தங்களது கட்சியுடன் இணைந்தாலே தவிர சுதந்திர கட்சியாக யாரையும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஐக்கிய தேசிய முன்னணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதேபோன்று விஜயதாச ராஜபக்ச ஐ.தே. முன்னணியில் இணைந்தால் அவருக்கு அமைச்சுப்பதவி வழங்கக்கூடாது என கட்சியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இன்று (14) ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி ஏற்று திங்கட்கிழமை அமைச்சரவை பதவி ஏற்குமெனவும் அத்துடன் 17’ம் திகதி காலிமுகத்திடலில் ஐக்கிய தேசிய முன்னணியின் வெற்றிக்கூட்டத்தை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.