புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 டிச., 2018

பிரான்சில் கிறிஸ்மஸ் சந்தை மீது தாக்குதலை மேற்கொண்ட நபர் சுட்டுக்கொலை!

பிரான்ஸின் ஸ்டிரஸ்பேர்க் நகரின் கிறிஸ்மஸ் சந்தை மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டார் என்ற சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டுவந்த நபர் இன்று பிரான்ஸ் காவல் துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

செவ்வாய்கிழமை சம்பவம் இடம்பெற்ற அதே நகரில் பயங்கரவாத சந்தேக நபர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

கடந்த மூன்று நாட்களாக சந்தேகநபரான செகாட்டை தேடிவந் காவல் துறை அவரை போன்ற நபர் ஒருவரை பார்த்ததாகவும் அவரை நிற்குமாறு உத்தரவிட்டவேளை அவர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டார் எனவும் பிரான்சின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் காவல் துறை மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் அவர் கொல்லப்பட்டார் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

செகாட்டை கண்டுபிடிப்பதற்காக கடந்த சில நாட்களாக நூற்றுக்கணக்கான காவல்துறையினர் நடவடிக்கையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது

மேலும் சந்தேகநபரின் குடும்பத்தவர்களையும் காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட நபரை காவல் துறை நன்கு அறிந்திருந்ததுடன் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்து விளைவிக்ககூடியவர் என்ற அடிப்படையில் கண்காணித்தும் வந்திருந்தனர்.

பல குற்றச்செயல்களிற்காக சிறைக்கு சென்றவேளை அங்கு இவர் தீவிரவாதமயப்படுத்தப்பட்டார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ad

ad