புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 டிச., 2018

பிரதமர் பதவியை இன்று ராஜினாமா செய்யும் மஹிந்த

பிரதமர் பதவியை இராஜினாமா செய்தவதற்கு மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தான் உட்பட அமைச்சரவை உறுப்பினர்களினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மேன் முறையீட்டு மனு இன்று விசாரிக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் எந்தவொரு தீர்ப்பு கிடைத்தாலும், பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக மஹிந்த தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பொதுஜன பெரமுன கட்சியின் பிரதானி,பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த விலகிக் கொண்ட போதும், ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரான போராட்டம் தொடரும். அதற்கிணைவாக இன்று முதல் எதிர்க்கட்சி பதவியை மஹிந்த பெற்றுக் கொள்வார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கட்சியின் உறுப்பினர்கள் நேற்றிரவு நடைபெற்ற சந்திப்பின் போது இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமராக மஹிந்த நியமிக்கப்பட்டமை, அமைச்சரவை அமைச்சர்களுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்த தடை உத்தரவுக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

மேன் முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெறவுள்ள நிலையில், மஹிந்தவின் கருத்து வெளியாகி உள்ளது.

ad

ad