தேசிய கலாச்சார மத்திய நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இடைக்கால அரசாங்கத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தமிழ் அரசியல் கைதிகள் என்று குறிப்பிடுபவர்களை விடுதலை செய்வது தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.
இந் நிலையில் தமக்கு ஆதரவளித்தால் கடந்த காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தொடர்ச்சியாக முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக ரணில் குறிப்பிட்டுள்ளமையாது பெரும்பான்மை மக்களுக்கு இழைக்கப்படும் பாரிய துரோகம் என்றார்.