புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 டிச., 2018

சென்னைக்கு வருகிறது ஐபோன் உற்பத்தி.. பல்லாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு!


கலக்கும் தலைநகர்.. சென்னைக்கு வருகிறது ஐபோன் உற்பத்தி.. பல்லாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு!

டுத்த வருடத்தில் இருந்து சென்னையில் ஃபாக்ஸ்கான் போன் உற்பத்தி ஆலையில் ஐபோன் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

ஆசியாவின் டெட்ராய்ட் என்று சென்னை அழைக்கப்படுகிறது. அந்த அளவிற்கு சென்னையில் ஆட்டோமொபைல் சாதனங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக சென்னையில் எலக்ட்ரானிக் சாதனங்களும் அதிக அளவில் தயார் செய்யப்பட்டு வருகிறது. சென்னையை நோக்கி பிரபல தொலைபேசி நிறுவனங்கள் படை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் உலகின் முன்னணி தொலைபேசி நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் உற்பத்தியை சென்னையில் தொடங்க உள்ளது. 2019ல் இருந்து சென்னையில் ஐபோன் உற்பத்தியை செய்ய உள்ளது. ஐபோனின் உயர் ரக மாடலான ஐபோன் எக்ஸ் (ஐபோன் 10) சென்னையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.

சென்னையிலிருந்து பெங்களூர் செல்லும் நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புத்தூரில் ஃபாக்ஸ்கான் போன் உற்பத்தி ஆலை அமைந்து இருக்கிறது. இந்த உற்பத்தி ஆலையில்தான் தற்போது ஐபோன் தயாரிக்கப்பட உள்ளது. இதற்காக அங்கு ஐபோன் தயாரிப்பு ஆலை ஒன்று புதிதாக நிறுவப்பட உள்ளது.

பொதுவாக முன்னணி தொலைபேசி நிறுவனங்கள் எல்லாம் தங்கள் ஆலைகளை பெங்களூரில் அமைக்கவே அதிக விருப்பம் தெரிவிக்கும். ஆனால் தற்போது தமிழகத்தில் இது போன்ற நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள் காரணமாக, அதிக அளவிலான நிறுவனங்கள் தமிழகத்தை நோக்கி வருகிறது.

பெங்களூரில் உள்ள பீனியாவில் ஐபோன் உற்பத்தி மையம் இருந்தது. தற்போது இங்கு செய்யப்படும் உற்பத்தியும் சென்னைக்கு மாற்றப்படும் என்று கூறுகிறார்கள். ஃபாக்ஸ்கான் போன் உற்பத்தி ஆலையில் ஏற்கனவே 13,500 பெண்கள் உட்பட 15000 பேர் வேலை பார்க்கிறார்கள். இந்த புதிய ஐபோன் உற்பத்தியால் இன்னும் பல்லாயிரம் ஊழியர்கள் வேலைக்கு சேர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது

ad

ad