புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 டிச., 2018

வெளியானது தீர்ப்பு; நான்கரை வருடங்கள்வரை நாடாளுமன்றைக் கலைக்கமுடியாதுமைத்திரி கடும் அதிர்ச்சி

நான்கரை வருடங்கள்வரை நாடாளுமன்றைக் கலைக்கமுடியாது என சிறிலங்கா உயர் நீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பினை வழங்கியுள்ளது.

இதன்படி, ”நாடாளுமன்றத்தை நான்கரை வருடங்களுக்கு முன்னர் கலைக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை. அதனால் மனுதாரர்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது” என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து நவம்பர் 12 ஆம் திகதி அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

பின்னர் மறுநாள் 13 ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அறிவித்தலை உயர்நீதிமன்றம் இடைநிறுத்தியது.

நாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான இந்த மனுக்களை விசாரித்த ஏழு நீதியரசர் மார் கொண்ட ஆயமே இன்று இந்த தீர்ப்பை வழங்கியது..

பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையில் நீதியரசர்கள் பிரசன்ன ஜயவர்தன, பிரியந்த ஜயவர்தன, புவனேக அலுவிஹாரே , விஜித் மலல்கொட , சிசிர டீ ஆப்ரூ, முருது பெர்னாண்டோ ஆகியோர் கொண்ட குழாம் மனுக்களை விசாரித்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad