புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 டிச., 2018

ரணிலுக்கு கூட்டமைப்பு ஆதரவு

ஐக்கிய தேசிய முன்னணியினரால் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கை பிரேரணைக்கு ஆதரவளிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு இறுதித் தீர்மானம் எடுத்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் இதனைத் தெரிவித்தார்.

நாடாளுமன்றம் இன்று (புதன்கிழமை) பிற்பகல் 1 மணிக்கு கூடவுள்ள நிலையில் இந்த பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது.

ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேனென ஜனாதிபதி மைத்திரி கூறியுள்ள அதேவேளை, அவரையே பிரதமராக நியமிக்க வேண்டுமென ஐ.தே.க. வலியுறுத்தி வருகின்றது. அதன் பிரகாரம் நாடாளுமன்றில் ரணிலுக்கு உள்ள பெரும்பான்மை மற்றும் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் இந்த பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது.

எனினும், இந்த பிரேரணைக்கு ஆதரவளிக்க மாட்டோமென மக்கள் விடுதலை முன்னணி குறிப்பிட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட புதிய அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கிய தேசிய முன்னணி, ஜே.வி.பியுடன் இணைந்து நம்பிக்கையில்லா பிரேரணைகளை கொண்டுவந்து அதனை பெரும்பான்மையுடன் நிறைவேற்றியிருந்தன.

இதனை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ச்சியாக தெரிவித்துவரும் நிலையிலேயே, இன்று ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

இதேவேளை, ஜே.வி.பி.யின் 6 உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காவிட்டாலும்கூட, 117 எனும் பெரும்பான்மையுடன் நம்பிக்கை வாக்கெடுப்பை நிறைவேற்றுவோம் என ஐக்கிய தேசிய முன்னணி நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad