புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 டிச., 2018

நாட்டுப்பற்றாளர்  சு வில்வரத்தினம் அவர்களின் நினைவஞ்சலி
ஈழத்தின் மூத்த எழுத்தாளர் , கவிஞர் , முற்போக்கு சிந்தனையாளரும் சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) நிறுவுனருமாகிய நாட்டுப்பற்றாளர் அமரர் சு. வில்வரத்தினம் அவர்களின் 12 வது நினைவுதினத்தினை முன்னிட்டு நேற்று புங்குடுதீவு பாரதி சனசமூக நிலையத்தில் அன்னாரது உருவப்படம் வைக்கும் நிகழ்வும் நினைவஞ்சலி உரைகளும் சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) ஏற்பாட்டில் இடம்பெற்றிருந்தன .
கவிஞர் சு. வி அவர்களின் நண்பர்களான சிறீகாந்தா ( முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் , மூத்த சட்டத்தரணி ) , நிலாந்தன் ( அரசியல் ஆய்வாளர் , எழுத்தாளர் , தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் ) , அன்னாரது சகோதரர் வே. சு . கருணாகரன் ( புங்குடுதீவு - நயினாதீவு பலநோக்கு கூட்டுறவுச் சங்க தலைவர் ) , வணக்கத்திற்குரிய செபஜீவன் அடிகளார் ( புங்குடுதீவு - நயினாதீவு கத்தோலிக்க பங்குத்தந்தை ) , பிள்ளைநாயகம் சதீஷ் ( புங்குடுதீவு உலக மையம் தலைவர் ) ஆகியோர் உரைகளை நிகழ்த்தியிருந்தனர் .
இளம் எழுத்தாளர் புங்கையூர் ராகுலன் நிகழ்வினை தொகுத்து வழங்கியிருந்தார் .
#சூழகம் .

ad

ad