புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

11 டிச., 2018

யாழ் ஊர்காவற்றுறையில் மகளின் பரிட்சைக்காக தந்தையின் இறுதிசடங்கு தள்ளிவைப்பு

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை நாரந்தனை வடக்கை பிறப்பிடமாகவும் வவுனியா தோணிக்கல்லை வசிப்பிடமாகவும்
கொண்ட கணேசலிங்கம் வேகாவனம் கடந்த 09 ஆம் திகதியன்று உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பில் காலமானார் .

இவரது கடைசி மகளாகிய வே .விஸ்ணுகா இவ்வருடம் நடைபெற்று வரும் க.பொ .த (சா /த) பரீட்சைக்கு தோற்றி வருவதனால் தந்தையின் இறுத்திச் சடங்குகள் பிற்போடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,கடந்த வாரம் க. வேகாவனம் இரவு உணவு உட்கொண்ட நிலையில் திடீர் என்று இயலாமை காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டு அங்கு சிகிச்சை பயனளிக்க முடியாத நிலையில் வீடு செல்லும் படி வைத்தியர்களால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதுபின்பு மேலதிக சிகிச்சைக்கான முயற்சியில் குடும்பத்தினர் கடந்த 7 ஆம் திகதி கொழும்பில் தனியார் மற்றும் அரச வைத்தியசாலைகளில் சிகிச்சைக்கான முயற்சிகளை மேற்கொண்ட போதும் , சிகிச்சை பலனின்றி கடந்த 09 ஆம் திகதி காலமானார் . ஆயினும் மகளான விஸ்ணுகா வவுனியாவில் பிரபல்யமான மகளீர் பாடசாலையில் பரீட்சைக்குத் தோற்றி வருகின்றார்.
இவ்வேளையில் விஸ்ணுகாவின் பரீட்சைக்கு இடையூறு ஏட்படக் கூடாது என்ற வகையிலும் தந்தையின் ஆத்மா சாந்திக்கான திருப்தியைக் கொடுக்கும் வகையிலும் விஸ்ணுகா பரீட்சை எழுதி முடியும் வரை தந்தையின் இறுதிக் கிரிகைகளை ஒத்திவைத்துள்ளதாக தெரிய வருகின்றது.
இந்நிலையில் விஸ்ணுகாவின் பரீட்சை நாளை (12.12.2018) நிறைவுற்றதும் மதியம் 2 மணிக்கு தந்தையின் இறுதிச் சடங்குகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.