அந்த வகையில் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலை புலிகள் கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பு இன்று (10) மட்டக்களப்பில் உள்ள தனியார் தங்குமிடத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அக்கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா இவ்வாறு தெரிவித்தார்.
நாம் சர்வதேச ஊடகங்களின் ஒன்றான அல்-ஜசீறா தொலைக்காட்சி பிரிவின் ஊடகவியலாளரின் அழைப்பின் பேரில் இன்று சந்தித்தோம், குறிப்பாக தற்போதைய சூழ்நிலையில் நாம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகள் விடயங்கள் மற்றும் குறிப்பாக வவுணதீவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் பின்னரான நிலைப்பாடுகளை விரிவாக கலந்துரையாடினோம்.
மேலும் புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகளும் அக்கட்சியினரும் வடக்குகிழக்கில் எவ்வகையாக இப்பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றனர் என்பதனையும் சம கால அரசியல் சூழ்நிலைகள் என பலவிடயங்கள் கலந்துரையாடப்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த சந்திப்பில் அக்கட்சியின் சார்பாக ஊடகப்பேச்சாளர் பி.ஜோன்சன், மட்டு அம்பாறை மக்கள் ஒருங்கிணைப்பாளர் போல் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.