11 டிச., 2018

276 எலும்புக்கூடுகளில் 21 எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது


மன்னார் மனித புதைகுழியிலிருந்து இதுவரை மீட்கப்பட்ட 276 எலும்புக்கூடுகளில் 21 எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது என அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ இன்று (11) தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறித்த புதை குழியில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை (11) மாலை வரை 276 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அவற்றில் 269 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் அகழ்வு பணிகளின் போது மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் பரிசோதனைக்காக எதிர்வரும் ஜனவரி மாதம் அளவில் புளோரிடாவுக்கு அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுவரை அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் 21 மனித எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.