புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 டிச., 2018

உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் – வடக்கில் மூவர் முதலிடம்

கல்வி பொதுத் தராதர உயர்தரப்பரீச்சையின் பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் தமிழ் மொழி முலம் பரீட்சைக்கு தோற்றியவர்களில், வடக்கு மாகாணத்தில் பௌதீக விஞ்ஞான
துறையில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லுாரி மாணவன் சன்முகநாதன் சஞ்சித் யாழ். மாவட்டத்தில் முதலாமிடத்தைப் பெற்றுள்ளார். அத்தோடு அவர் தேசிய ரீதியில் ஆறாவது இடத்தையும் பெற்றுள்ளார்.
அத்தோடு கலைப்பிரிவில் சாவகச்சேரி இந்துக்கல்லுாரி மாணவி சிங்கராசா நிலக்ஷனா  முதலாமிடத்தைப் பெற்றுள்ளார்.
இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி-முருகானந்தா கல்லுாரி மாணவி கந்தையா ஜனனி வணிகப்பிரிவில் 3A சித்திகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

ad

ad