புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 டிச., 2018

முல்லைதீவு வந்த கனேடிய உயர் ஸ்தானிகர்!

இலங்கையின் தற்போதைய அரசியல் குழப்பங்கள் மற்றும் அது தொடர்பிலான தமிழ் மக்களது மன ஓட்டத்தை கண்டறிவதில்

கனடா கூடிய அக்கறை செலுத்தி வருகின்றது.

அவ்வகையில் கனேடிய உயர் ஸ்தானிகர் டேவிட் மெகின் வடக்கிற்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.அவர் இன்றைய தினம் முல்லைதீவுக்கு விஜயம் செய்ததுடன் அங்கு தமிழர் மரபுரிமைப் பேரவையினரை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

முக்கியமாக மகாவலி ஊடான திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் ,தொல்லியல் திணைக்களத்தினுடைய ஆக்கிரமிப்பு ,வனதிணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் தினைக்களத்தினுடைய ஆக்கிரமிப்பு தொடர்பாக இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

அத்துடன் அரசியல் கைதிகள் விடயம் ,காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் ,அரசியல் தீர்வு தொடர்பாகவும்,மற்றும் தமிழ் மக்களின் அன்றாட வாழ்வாதார பிரச்சனை தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டதாக தமிழர் மரபுரிமைப் பேரவையினர் தெரிவித்தனர்.

இச்சந்திப்பானது சுமார் இரண்டரை மணித்தியாலங்களிற்கு மேலாக இடம்பெற்றுள்ளது.



தம்மால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்பதாக கனடா நாட்டு தூதுவர் வாக்குறுதி அளித்திருந்ததாகவும் தமிழர் மரபுரிமைப் பேரவையினர் தெரிவித்தனர்.

ad

ad