புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஜன., 2019

தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் உயிர் நண்பர் சாவடைந்தார்

தமிழீழம் வடமராட்சி திக்கத்தைச் சேர்ந்த திருவாளர் பிறைசூடி அவர்கள் தமிழ்நாடு சென்னையில் காலமானார்.


சிறீலங்காவின் அரச சேவையில் பணியாற்றிக் கொண்டிருந்த பிறைசூடி அவர்கள் தனிச்சிங்களச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அரசபணியை தாமாகவே துறந்தவர்.

British ship service ல் கப்பல் அதிகாரியாக இருந்தவர்.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஆரம்பகாலம் முதல் உயிர் நண்பர்.

1983 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் முதன்முதலாக தமிழீழ விடுதலைப் புலிகளின் வளர்ச்சிக்காக புலிகளின் வர்த்தக கப்பல் சேவை யை தொடங்கியவர்.

புலிகளின் சர்வதேச கடல் போக்குவரத்து (வர்த்தக கப்பல் , ஆயுத கப்பல் ) இவர் மேற்பார்வையில் நடந்தது.


கிட்டு இறுதியாக வந்த கப்பல் இவருடைய ( parking ) சொந்த தளத்தில் பதியப்பட்டு இருந்தை அறிந்த இந்தியன் ரோ கைது செய்து பின் இந்திய அரசால் தொடர்ந்து வீட்டுக்காவலில் கண்காணிப்பில் இருந்தார்.

இவருக்கு மூன்று மகன்கள் பார்த்தசாரதி , வியயசாரதி , ஜனகன் உள்ளார்கள்.

தேச விடுதலையை நேசித்த அந்த அற்புதமான மனிதரான திரு. பிறைசூடி அவர்கள் தமிழீழ போராட்ட வரலாற்றில் தன்னையும் இன்று பதித்துக்கொண்டார். அவருக்கு தமிழ் மக்களாகிய எங்களது வீரவணக்கங்கள்.

ad

ad