8 ஜன., 2019

அவுஸ்திரேலியாவுக்கெதிரான தொடரை வென்றது இந்தியா

அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என இந்தியா வென்றது.

இத்தொடரில், ஏற்கெனவே 2-1 என முன்னிலை பெற்றிருந்த இந்தியா சிட்னியில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பித்த நான்காவது டெஸ்ட் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தமையைத் தொடர்ந்தே 2-1 என தொடரை இன்று கைப்பற்றியது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இந்தியா

இந்தியா: 622/7 (துடுப்பாட்டம்: செட்டேஸ்வர் புஜாரா 193, றிஷப் பண்ட் ஆ.இ 159, இரவீந்திர ஜடேஜா 81, மாயங்க் அகர்வால் 77, ஹனும விஹாரி 42 ஓட்டங்கள். பந்துவீச்சு: நேதன் லையன் 4/178, ஜொஷ் ஹேசில்வூட் 2/105)

அவுஸ்திரேலியா: 300/10 (துடுப்பாட்டம்: மார்க்கஸ் ஹரிஸ் 79, மர்னுஸ் லபுஷைன் 38, பீற்றர் ஹன்ட்ஸ்கொம்ப் 37, மிற்செல் ஸ்டார்க் ஆ.இ 29, உஸ்மான் கவாஜா 27, பற் கமின்ஸ் 25 ஓட்டங்கள். பந்துவீச்சு: குல்தீப் யாதவ் 5/99, இரவீந்திர ஜடேஜா 2/73, மொஹமட் ஷமி 2/58, ஜஸ்பிரிட் பும்ரா 1/62)

அவுஸ்திரேலியா (பொலோ ஒன்): 6/0

போட்டியின் நாயகன்: செட்டேஸ்வர் புஜாரா

தொடரின் நாயகன்: செட்டேஸ்வர் புஜாரா