புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மார்., 2019

இந்தியாவிற்கு விமானம் விடுகின்றார் விஜயகலா

யாழ்ப்பாணம் மற்றும் இந்தியாவுக்கான விமான சேவையில் முதலீடு செய்ய ஜக்கிய தேசியக்கட்சி அமைச்சரான விஜயகலா திட்டமிட்டுள்ளார்.

குறித்த விமான சேவை தொடர்பில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனியார் துறையினருக்கு முதலீட்டிற்கான அழைப்பினை விடுத்திருந்தார்.

கொழும்பில் நடந்த வணிக மாநாடு ஒன்றில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விமானங்கள் இயக்கப்படுவதில்லை என்றும், இது புலம்பெயர் தமிழர்களின் முறைப்பாடு என்றும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணத்தில் உள்ள தமது உறவுகளை பார்க்க செல்லும் போது, கட்டுநாயக்கவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விமானத்தில் செல்ல முடியாதிருப்பதாக அவர்கள் முறையிடுகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்குப் பதிலளித்து உரையாற்றிய சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, “யாழ்ப்பாணத்துக்கோ, இந்தியாவுக்கோ யாரேனும் விமான சேவைகளை நடத்த முடியும். அதற்கான கதவுகளை அரசாங்கம் திறந்தே வைத்திருக்கிறது. தனியார் துறையினர் இதற்கான முயற்சிகளை எடுக்கலாம்” என்று குறிப்பிட்டிருந்தார்.



இதனையடுத்தே விஜயகலா மகேஸ்வரன் தற்போது விமான சேவையினை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரியவருகின்றது.

ad

ad