30 மார்., 2019

சிறைக்கு செல்லும் சரவண பவன் ஓட்டல் உரிமையாளர்


ஜோதிடரின் வார்த்தையால் பெண் மீது ஆசைப்பட்டு கொலை செய்த
வழக்கில், ஆயுள் தண்டனை பெற்று பிரபல சரவண பவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் தனது வாழ்க்கையை இழந்துள்ளார். தமிழகம் மற்றும் நாடு முழுவதும் கிளைகள் உள்ள சரவண பவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் ஜோதிடத்தில் அதீத நம்பிக்கை உடையவர்.
தனது ஓட்டல் வளர்ச்சி குறித்து ஜோதிடர் ஒருவரை ராஜகோபால் சந்தித்து பேசியுள்ளார். அப்போது, அந்த ஜோதிடர், உங்கள் ஜாதகத்தில் உள்ளபடி நீங்கள் இளம்பெண் ஒருவரை மூன்றாவதாக திருமணம் செய்தால், உங்கள் ஓட்டல் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்று கூறியுள்ளார். அதை நம்பிய ராஜகோபால் மூன்றாவதாக இளம்பெண் ஒருவரை திருமணம் ெசய்ய முடிவு ெசய்தார்.
ராஜபோபாலுக்கு 50 வயதுக்கு மேல் ஆவதால் அவருக்கு மூன்றாவதாக பெண் கொடுக்க யாரும் முன்வரவில்லை. பல இடங்களில் பெண் தேடியும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதற்கிடையே தனது ஓட்டலில் வேதாரண்யம் அருகே உள்ள தோத்தாக்குடி கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவர் மேலாளராக பணியாற்றி வந்தார். தந்தையை பார்க்க அடிக்கடி அவரது மகள் ஜீவஜோதி ஓட்டலுக்கு வந்து ெசன்றுள்ளார். பார்க்க அழகாக ஜீவஜோதி இருந்ததால் ராஜகோபால் மூன்றவாதாக திருமணம் ெசய்ய முடிவு செய்தார்.

 மேலாளரிடம் பெண் கேட்டுள்ளார். முதலில் அவர் மறுத்துள்ளார். அப்போது ராஜகோபால் உங்கள் மகளை திருமணம் செய்து கொடுத்தால், மகள் பெயரில் தனியாக சொத்துக்களில் சிலவற்றை எழுதி கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். ஒரு கட்டத்தில் தனது உரிமையாளர் ராஜகோபாலுக்கு மகள் ஜீவஜோதியை திருமணம் ெசய்து கொடுக்க அவரது மேலாளர் முடிவு செய்தார். 

ஆனால், ஜீவஜோதி, பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரை காதலித்து வந்தார். ஜீவஜோதியிடம் அவரது தந்தை பல ஆசை வார்த்தை கூறி வயதான ராஜகோபாலை திருமணம் ெசய்ய வற்புறுத்தினர். ஆனால் ஜீவஜோதி தனது காதலனை தான் திருமணம் செய்வேன் என்று உறுதியாக இருந்து, பிரின்ஸ் சாந்தகுமாரையே காதல் திருமணம் செய்து கொண்டார். பிறகு சென்னை வேளச்சேரியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இருவரும் மகிழ்ச்சியாக வசித்து வந்தனர். ஜீவஜோதி தையல் கடை நடத்தி வந்தார்.

ராஜகோபாலின் ஜாதகத்தில் ஜீவஜோதி ஜாதகம் உள்ள பெண்ணை திருமணம் செய்தால்தான், தொழில் வளர்ச்சியடையும் என்று அவரது ஜோதிடர் கூறியதால், ஜீவஜோதியை அவரது காதல் கணவரை கொலை செய்தாவது திருமணம் ெசய்து கொள்ள வேண்டம் என்று முடிவு செய்தார். 2001 ஜனவரி 26ம் தேதி ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் அவரது கணவர் கிடைக்காததால் ஜீவஜோதி வேளச்சேரி காவல் நிலையத்தில் கணவர் மாயமானதில் ராஜகோபால் மீது எனக்கு சந்தேகம் உள்ளது என்று புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரின்ஸ் சாந்தகுமாரை தேடி வந்தனர். 

 இதற்கிடையே கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள குகையில் பிரின்ஸ் சாந்தகுமார் கொடூரமாக கொலை செய்து வீசப்பட்டிருந்தார். உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, ஜீவஜோதியை திருமணம் ெசய்து கொள்ளும் ஆசையில் அவரது கணவரை ராஜகோபால் கடத்தி கொலை செய்தது தெரியவந்தது.
பின்னர், போலீசார் சரவண பவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த டேனியல், காசி விஸ்வநாதன், உசேன், கார்மேகம், முருகானந்தம், தமிழ்ச்செல்வன், சேது, பாண்டுரங்கன் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்து அதிரடியாக போலீசார் 9 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்போது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. 

 கடந்த 2014ம் ஆண்டு இந்த வழக்கு பூந்தமல்லி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு ராஜகோபாலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், கொலைக்கு உடந்தையாக இருந்த 8 பேருக்கும் 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதேநேரம், கடத்தல் வழக்கில் தனியாக நீதிமன்றம் தண்டனை அறிவித்தது. இதில் ராஜகோபாலுக்கு 3 ஆண்டும், மற்றவர்களுக்கு 2 ஆண்டும் தண்டனை அளிக்கப்பட்டது. இதனை எதிர்த்து ராஜகோபால் உட்பட 9 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தனர். அதில், தங்களது தண்டனையை மேலும் குறைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். அதற்கு அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கீழ் நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட தண்டனை குறைவாக உள்ளது. எனவே அனைவருக்கும் ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது அதனை தொடர்ந்து 2009ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்த விசாரணையின் இறுதியில், ராஜகோபால் உள்ளிட்ட 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. மீதமுள்ள 3 பேருக்கு பூந்தமல்லி நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்தது.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ராஜகோபால் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். கடந்த 10 ஆண்டுகளாக  உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்த விசாரணையில், ஜீவஜோதி கணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அனைத்து ஆதாரங்களும் சவரண பவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபாலுக்கு எதிராக வலுவாக அமைந்திருந்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றம் நேற்று அதிரடியாக உயர் நீதிமன்றம் அளித்த  ஆயுள் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது.