22 மே, 2019

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

இடைப்பருவப்பெயர்ச்சி காலநிலையின் தாக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய கடும் மழை பெய்து வருகின்றது.

இந்தநிலையில், மத்திய, சப்ரகமுவ, மேல், ஊவா மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்தின் சில இடங்களிலும் இன்று (22ஆம் திகதி) 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யும் எனவும் மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் பாதிப்புக்களைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறும் பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது