புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

20 ஜூன், 2019

இன்றும் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்!- 1000 தீபங்கள் ஏற்றி ஆதரவு

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி, கல்முனையில் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் இன்று 4ஆவது நாளாகவும் தொடர்கிறது. கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கையின் இந்துகுருமார் ஒன்றியத்தலைவர் சிவஸ்ரீ.க.கு.சச்சிதானந்த சிவம் குருக்கள், கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான அழகக்கோன் விஜயரெட்ணம், சந்திரசேகரம் ராஜன் உள்ளிட்டோர் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேவேளை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரிய உண்ணாவிரதப் போராட்டத்தில் 1000 தீபங்கள் ஏற்றப்பட்டு நேற்று மாலை இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. 1000 தீபங்கள் ஏற்றும் நிகழ்வில் கல்முனையில் உள்ள இளைஞர்கள், ஆலயங்களின் தர்மகர்த்தாக்கள், கிறிஸ்தவ பாதிரியார்கள், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், பொது அமைப்புகள் மற்றும் மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.