புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜூன், 2019

இங்கிலாந்து 35 runs 5.5 over 0 w உலகக்கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு

இங்கிலாந்து 35 runs 5.5 over 0 w
உலகக்கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு
உலகக்கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு
Facebook Twitter Mail Text Size Print உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
பதிவு: ஜூன் 30, 2019 14:42 PM
பர்மிங்காம்

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பர்மிங்காமில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அரங்கேறும் 38-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, இங்கிலாந்தை சந்திக்கிறது. நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணியான இந்தியா 5 வெற்றி, ஒரு முடிவில்லை என்று 11 புள்ளிகளுடன் அரைஇறுதி வாய்ப்பின் விளிம்புக்கு வந்து விட்டது. இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் இந்தியா சிக்கலின்றி அரைஇறுதிக்குள் நுழைந்து விடும்.


இங்கிலாந்து அணியை பொறுத்தவரை முதல் 5 ஆட்டங்களில் 4-ல் வெற்றி பெற்று கம்பீரமாக பயணித்தார்கள். இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவிடம் அடுத்தடுத்து ‘சரண்’ அடைந்ததால் இங்கிலாந்தின் அரைஇறுதி வாய்ப்பு சிக்கலாகியுள்ளது. எஞ்சிய இரு ஆட்டங்களிலும் அந்த அணி வெற்றி பெற்றால் மட்டுமே அரைஇறுதிக்கு தகுதி பெற முடியும்.

எனவே இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வென்றாக வேண்டிய உச்சக்கட்ட நெருக்கடியுடன் களம் இறங்குவார்கள். பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் வலுவாக காணப்படும் இங்கிலாந்து அணி ஏனோ கடந்த இரு ஆட்டங்களில் ஆக்ரோஷமின்றி பணிந்து போய் விட்டது. இது வாழ்வா? சாவா? மோதல் என்பதால் நிச்சயம் ஆக்ரோஷமாக வரிந்து கட்டி நிற்பார்கள்.

இந்நிலையில், பர்மிங்காமில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச உள்ளது. 11 பேர் கொண்ட இந்திய அணியில் இருந்து விஜய் சங்கருக்கு பதிலாக ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டுள்ளார்.

பலம் பொருந்திய இரு அணிகள் மல்லுகட்டுவதால் இன்றைய ஆட்டத்தில் சூடுபறக்கும். இந்திய அணி வழக்கமாக நீலநிற சீருடையில் ஆடும். ஆனால் இரு அணிகளின் சீருடையும் ஒரே நிறம் என்பதால் ஐ.சி.சி.யின் புதிய விதிமுறைப்படி இந்தியாவின் சீருடை நிறம் மாற்றப்பட்டுள்ளது. இதன்படி இந்திய வீரர்கள் ஆரஞ்சு, நீலம் நிறம் கலந்த புதுமையான சீருடையில் இன்றைய போட்டியில் ஜொலிக்கப்போகிறார்கள். உலக கோப்பை போட்டி இங்கிலாந்தில் நடந்தாலும் இந்திய அணி விளையாடும் போது ரசிகர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

ad

ad