புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

12 ஜூன், 2019

அதிமுக ஆலோசனை கூட்டம்: 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்

அதிமுக ஆலோசனை கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
அதிமுக ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட  5 தீர்மானங்கள்  வருமாறு:- 

* உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்காக தீவிரமாக பணியாற்ற உறுதியேற்க தீர்மானம்.

* மக்களவை தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்.

* எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் மக்கள் நலப்பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி தீர்மானம்.

* நாட்டின் பிரதமரை வழிமொழியும் வாய்ப்பை அதிமுகவிற்கு பாஜக வழங்கியதற்கு மகிழ்ச்சி தெரிவித்து தீர்மானம்.

* நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலில் கழகத்தின் சார்பிலும், கூட்டணிக்கட்சிகளின் சார்பிலும் போட்டியிட்ட வேட்பாளர்களின்  வெற்றிக்காகவும், சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட்ட கழக  வேட்பாளர்களின் வெற்றிக்காகவும் அரும்பணியாற்றிய கழக நிர்வாகிகளுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும், தேர்தல் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு உழைத்த கூட்டணி கட்சிகளின்  தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும், தோழமை கட்சிகளின்  தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் மற்றும் நல்லாதரவு வழங்கிய அமைப்புகள் அனைத்திற்கும் இந்த கூட்டம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

இவ்வாறு 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.