புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

10 ஜூன், 2019

அவசரத்திற்கு பதில் அமைச்சர்கள்?

முஸ்லீம் அமைச்சர்கள் பௌத்த பீடங்களது ஆசீர்வாதத்துடன் மீண்டும் கதிரையேற காத்திருக்கின்ற நிலையில் அவர்களது இடங்களிற்கு பதில் அமைச்சர்கள் மூவர் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர்.

நகர திட்டமிடல், நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜெயவர்த்தன நகர திட்டமிடல், நீர்வழங்கல், உயர்கல்வி பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தொழிற்றுரை பிரதியமைச்சர் புத்திக பத்திரண தொழிற்றுரை, வர்த்தக அலுவல்கள், நீண்டகால இடம்பெயர்நத்வர்களை மீள்குடியேற்றல், கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் தொழிற்கல்வி பயிற்சி பதில் அமைச்சராகவும் பெற்றோலிய வள அபிவிருத்தி பிரதியமைச்சர் அனோமா கமகே பெருந்தெருக்கள், வீதி அபிவிருத்தி பதில் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 3ஆம் திகதி பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிசாட் பதியூதின் உள்ளிட்டவர்களது இடங்களிற்கே இந்நியமனங்கள் நடந்துள்ளது.