புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

2 ஜூன், 2019

முத்திரை வேண்டாம் ஆளை விடு - ரணிலின் நிகழ்வில் பாதுகாப்பு கெடுபிடி

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் யாழ்ப்பாண நிகழ்வில் கலந்து கொள்ள சென்ற மக்கள் யாழ் முற்றவெளிக்கு
வெளியில் வைத்து இன்று தீவிர சோதனைகளின் பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

யாழ்ப்பாணத்தில் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள 4500 சமுர்த்தி பயனாளிகளுக்கு இணைப்பு சான்றிதழ்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு யாழ் முற்றவெளியில் இன்று நடைபெறுகின்றது.

இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் கலந்து கொண்டு மக்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைக்கவுள்ளார். நிகழ்வில் கலந்து கொள்ள வந்த மக்கள் அனைவரும் முற்றவெளிக்கு வெளியில் வைத்து ஒவ்வொருவராக தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட் பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் பொதிகள் கைப்பைகள் போன்றவை கொண்டு செல்லவும் அனுமதிக்கப்படவில்லை.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளால் தாங்கள் அசௌகரியங்களை உணர்ந்ததாக தெரிவித்த மக்கள் இந்த முத்திரை வேண்டாம் எங்களை விட்டுவிடுங்கள் என வீட்டிலேயே இருந்திருக்கலாம் என தோன்றியதாகத் தெரிவித்துள்ளனர்.