புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

22 ஜூன், 2019

உடுவிலில் இளம் பெண்ணைக் கடத்த முயற்சி!- பாலியல் விடுதி இயங்கியமை அம்பலம்

உடுவிலில் இளம் பெண்ணைக் கடத்த முயற்சி!- பாலியல் விடுதி இயங்கியமை அம்பலம்.

யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில், வீதியால் சென்று கொண்டிருந்த இளம்பெண்ணை சிலர் கடத்த முயற்சித்துள்ளனர். அவர்களின் பிடியிலிருந்து தப்பிச் சென்ற பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதையடுத்து,அலைபேசி வலையமைப்பு நிறுவனத்தின் பெயரில் அப்பகுதியில் பாலியல் விடுதி ஒன்று இயங்கியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில், வீதியால் சென்று கொண்டிருந்த இளம்பெண்ணை சிலர் கடத்த முயற்சித்துள்ளனர். அவர்களின் பிடியிலிருந்து தப்பிச் சென்ற பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதையடுத்து,அலைபேசி வலையமைப்பு நிறுவனத்தின் பெயரில் அப்பகுதியில் பாலியல் விடுதி ஒன்று இயங்கியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உடுவில் கிழக்கு (184) கிராம அலுவலர் அலுவலகம் இயங்கும் வீட்டில் கடந்த ஒரு மாத காலமாக டயலொக் என்ற நிறுவனத்தின் பெயர்ப்பலகையுடன் அலுவலகமொன்று இயங்கி வந்துள்ளது. குறித்த அலுவலகத்தில் நுகேகொட மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த 2 இளைஞர்கள் மற்றும் 2 இளம் பெண்களும் தங்கியிருந்துள்ளனர். மேலும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்களும் அங்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த நிறுவனத்தின் நடவடிக்கையை ஆராய்ந்த உடுவில் கிழக்கு பெண் கிராம அலுவலகர், அங்கிருந்தவர்களிடம் நிறுவனம் தொடர்பான பதிவைக் கேட்டதுடன் தனது பிரிவில் இயங்குவதாயின் பதிவு செய்வது கட்டாயமெனவும் கிராம அலுவலகர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தம்மை டயலொக் நிறுவனத்தின் அலுவலகர்கள் எனக் குறிப்பிட்ட சந்தேகநபர்கள், பொலிஸாருக்கு தமது நடவடிக்கைகள் தொடர்பில் உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டது என்றும் கிராம அலுவலகருக்கு தெரிவித்துள்ளனர். இதனால் இவ்விடயம் உடுவில் பிரதேச செயலாளரின் கவனத்துக்கு தன்னால் கொண்டு செல்லப்பட்டதாக உடுவில் கிழக்கு கிராம அலுவலகர் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று காலை உடுவில் அம்பலவாணர் வீதியில் பயணித்த இளம் பெண் ஒருவரை 2 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் இணைந்து வழிமறித்துக் கடத்த முற்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பித்த அந்த இளம் பெண், சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது பொலிஸாரின் வருகையை அறிந்ததும் சந்தேகநபர்கள் நால்வரும் அங்கிருந்து தப்பித்துள்ளனர். எனினும் நுகேகொடையைச் சேர்ந்த ஆண் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இதேவேளை வலி.தெற்கு பிரதேச சபை உறுப்பினர் தவராஜா துவாரகன், உடுவில் பிரதேச செயலாளர், உடுவில் கிழக்கு கிராம அலுவலகர், பொதுமக்கள் என பலரும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கூடியதுடன் விபச்சார விடுதி தொடர்பில் அந்த வீட்டின் உரிமையாளர் உட்பட அனைவரையும் கைது செய்யவேண்டும் என்றும் அவர்கள் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.