புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூலை, 2019

கீத் நொயார் வழக்கில்லலித் ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல்

த நேஷன் பத்திரிகையின் முன்னாள் இணை ஆசிரியர் கீத் நொயார் கடத்தப்பட்டு சட்ட விரோதமாக தடுத்து வைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டமை, ஆயுதத்தால் தாக்கப்பட்டமை, கொலை செய்ய முயற்சிக்கப்பட்டமை தொடர்பில் ஒன்பதாவது சந்தேக நபரான இராணுவ புலனாய்வுப் பிரிவின் கோப்ரல் லலித் ராஜபக்ஷ நேற்று கல்கிசை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.

ஏற்கனவே ஊடகவியலாளர் உபாலி தென்னகோன் தாக்குதல் விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் அவர் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே, சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக, கண் கண்ட சாட்சி ஒன்றின் அடிப்படையில் அவரை ஊடகவியலாளர் கீத் நொயார் விவகாரத்தில் சந்தேக நபராக செய்ததாக சி.ஐ.டி.யின் சமூக கொள்ளை குறித்த விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா நீதிமன்றுக்கு அறிவித்தார்.

இதனையடுத்து கல்கிசை மேலதிக நீதிவான் சி.எச்.வீ.லியனகே சந்தேக நபரான லலித் ராஜபக்ஷவை எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன் அன்றைய தினம் அடையாள அணி வகுப்புக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கவும் அறிவித்தல் விடுத்தார்.

ad

ad