28 ஜூலை, 2019

ரொரன்டோவில் தமிழ் மாணவி சாதனை

இலங்கை தமிழ் மாணவி ஒருவர், கனடாவில் ரொரன்டோ கல்விச் சபையில் 2019ஆம் ஆண்டிற்கான பரீட்சைகள் அனைத்திலும் சிறந்த பெறுபேறுகளை பெற்ற நான்கு மாணவர்களில் ஒருவராக சாதனை படைத்துள்ளார்.
இலங்கை தமிழ் மாணவி ஒருவர், கனடாவில் ரொரன்டோ கல்விச் சபையில் 2019ஆம் ஆண்டிற்கான பரீட்சைகள் அனைத்திலும் சிறந்த பெறுபேறுகளை பெற்ற நான்கு மாணவர்களில் ஒருவராக சாதனை படைத்துள்ளார்.

விக்டோரியா பாடசாலையைச் சேர்ந்த தமிழ் மாணவியான சரண்யா ஜெயகாந்தன் இந்த சாதனையை படைத்துள்ளார். இவர் 99 சதவீதத்திற்கும் அதிகமாக புள்ளிகளைப் பெற்றுள்ளார். Waterloo பல்கலைக்கழகத்தில் பொறியியல் மேற்படிப்பினை தொடருவதற்கான வாய்ப்பினை சரண்யா ஜெயகாந்தன் பெற்றுள்ளார். குறித்த மாணவி யாழ்ப்பாணம் கரவெட்டி பகுதியை சேர்ந்தவராவார்.