புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜூலை, 2019

போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து ஐ.நா இரகசிய விசாரணை?

இலங்கைக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இரகசியமான முறையில் விசாரணை செய்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
போர்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட இலங்கையின் சிரேஸ்ட படை அதிகாரிகள் தொடர்பில் இவ்வாறு விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இரகசியமான முறையில் விசாரணை செய்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. போர்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட இலங்கையின் சிரேஸ்ட படை அதிகாரிகள் தொடர்பில் இவ்வாறு விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பில் பணியாற்றிய அதிகாரியான யஸ்மீன் சூகா இது பற்றிய தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளார்.

விசாரணைகளை நடத்தி அது தொடர்பில் கடந்த 2015ம் ஆண்டு கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக சூகா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இந்த விவகாரம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு எவ்வித விபரங்களையும் அறிவிக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.

இரகசியமாக நடத்தப்பட்ட விசாரணைகளின் போது சாட்சியாளர்கள் சத்தியக் கடதாசிகளை வழங்கியுள்ளதாக யஸ்மீன் சூகா கூறியுள்ளார் . எனினும், யஸ்மீன் சூகா எங்கு எப்போது இந்த விடயங்கள் பற்றி அம்பலப்படுத்தினார் என்பது பற்றியோ இலங்கையின் எந்தெந்த இராணுவ உயர் அதிகாரிகள் தொடர்பில் போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட்டது என்பது பற்றியோ செய்தியில் விபரங்கள் குறிப்பிடப்படவி

ad

ad