புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

11 செப்., 2019

பாதுகாப்பு அமைச்சை முற்றுகையிட்டுள்ள இராணுவ வீரர்கள்

விசேட தேவையுடைய இராணுவ வீரர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள எதிர்ப்பு பேரணி காரணமாக காலிமுகத்திடல் வீதி கொழும்பு லோட்டஸ் சுற்று வட்டம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு மற்றும் உபாதைக்கு உள்ளான இராணுவ வீரர்களுக்கு வழங்குவதற்கு உறுதியளிக்கப்பட்டிருந்த கொடுப்பனவு தொகை நல்லாட்சி அரசாங்கத்தினால் இதுவரை வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.கொழும்பு மற்றும் கொழும்பை அணிமித்த பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகின்ற போதிலும் அதனை பொருட்படுத்தாமல் உபாதைக்கு உள்ளான இராணுவ வீரர்கள் மற்றும் உயிரிழந்த இராணுவ வீரர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பாதுகாப்பு அமைச்சினை முற்றுகையிட முயற்சித்த போது, கலகத்தடுப்பு காவல்துறை பிரிவினரால் வீதித் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் தண்ணீர் தாரை பிரயோக வாகனங்களும் சம்பவ இடத்தில் காணப்படுகின்றன.