26 செப்., 2019

ஐரோப்பிய ஒன்றியத்தின் துரோகத்தனமே இனப்படுகொலையானது; ஐநாவில் வேல்முருகன்


சுவிற்சர்லாந்து, தமிழ்நாடு

ஐரோப்பிய ஒன்றியத்தின் துரோகச் செயலே தமிழினப்படுகொலைக்கு காரணமானது என தமிழக வாழவுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் அமைப்பின் சார்பில் நடைபெற்றுவரும் 42வது கூட்டத்தில் பங்கேற்கவும் மற்றும் உலக தமிழர்கள் உடனான பல்வேறு நிகழ்ச்சிகளுக்காகவும் ஒரு வார காலம் சுற்றுப்பயணமாக ஜெனீவா சென்றுள்ளார். ஜெனீவா சென்றுள்ள அவர் நேற்று 23.09.2019 மாலை மனித உரிமை ஆணையத்தின் சார்பில் நடைபெற்ற அதன் துணை அமர்வில் பங்கேற்று "ஆக்கிரமிப்பின் கீழ் தேசங்கள்" என்ற தலைப்பில் உரையாறும் போதே இவ்வாறு கூறியுள்ளார். பேச்சுவார்த்தையில் சிங்கள தரப்பும் தமிழ் தரப்பும் இருந்த வேளை தமிழ் தரப்பை மட்டும் தடை செய்தது தமிழினப்படுகொலைக்கு வழிவகுத்தது கொடுத்துள்ளது என்று பேசிய அவர். தமிழர் நிலங்களில் தற்போதும் சிங்கள ராணுவங்கள் நிலைகொண்டுள்ளதை கண்டுகொள்ளாத சர்வதேச சமூகம் தொடர்ந்தும் இனப்படுகொலைக்கு துணைபோவதாகவே நினைக்கிறேம் என பகிரங்கமாக குற்றம்சாட்டி பேசியுள்ளார்