புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

9 செப்., 2019

கிழிந்தது முரளியின் முகமூடி .உலகத்தமிழர்கள் முரளிக்கு எதிராக எழுவீர் ------------------------------------------------ முரளிதரனின் பேச்சுக்கு உலகெங்கும் இருந்து கண்டனம்

2009 இல் யுத்தம் முடிவிற்கு வந்த-விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே எனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் எனவும் இலங்கையின் முன்னாள் சுழற்பந்த வீச்சாளர் முத்தையா முரளீதரன் தெரிவித்துள்ளார். அவரது இந்தக் கருத்து தமிழ் மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது, இதற்கு சமூக ஊடகங்களில் கடுமையான கண்டனங்களுக்கும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் வியத்மக அமைப்பின் மாநாடு கொழும்பில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன், சமாதான பேச்சுவார்த்தைகளின் போது விடுதலைப் புலிகளிற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர்கள் அப்பாவிகளை கொலை செய்தனர். விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட நாள் எனது வாழ்வின் முக்கியமான நாள் என கூறியிருந்தார்.

இந்தக் கருத்து உலகெங்கும் இருந்து தமிழ் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பரவலாக எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

அதேவேளை, இங்கு உரையாற்றிய முரளிதரன், இலங்கையை அரசியல் அனுபவமிக்க அரசியல்வாதி ஒருவரே ஆட்சி செய்யவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி அனுபவமிக்க அரசியல்வாதி ஒருவரே தெரிவு செய்யப்படவேண்டும் .கிரிக்கெட் வீரர்களும் ஏனைய துறைசார் வல்லுனர்களும் நாட்டிற்கு தலைமை தாங்க முடியாது .

இலங்கையில் சிலர் வர்த்தகர்கள் மீதும் ஏனையவர்கள் மீதும் நம்பிக்கை வைக்கின்றனர் ஆனால் மக்களின் பிரச்சினைகளை அரசியல் அனுபவம் உள்ள அரசியல் ரீதியில் முடிவெடுக்க கூடிய ஒருவராலேயே தீர்க்க முடியும் .

இலங்கையில் சில விடயங்களை சாதித்த மக்களை பாதுகாக்ககூடிய ஒருவரிற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.உண்மையான தலைவர் முன்னுதாரணத்தின் மூலம் தலைமை தாங்குபவர் எனவும் முரளிதரன் தெரிவித்துள்ளார்