புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

5 செப்., 2019

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நடால் அரையிறுதிக்கு தகுதி- பென்சிக், பினாக்கா முன்னேற்றம்

யூயார்க்கில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸில் நடால் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நடால் அரையிறுதிக்கு தகுதி- பென்சிக், பினாக்கா முன்னேற்றம்
நடால்
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி இன்று காலை 7 மணிக்கு நடந்த கால் இறுதி ஆட்டம் ஒன்றில் உலகின் 2-ம் நிலை வீரரான ரபேல் நடால் (ஸ்பெயின்)- 21-வது வரிசையில் உள்ள டியாகோ சுவர்ட்ஸ்மேன் (அர்ஜென்டினா) மோதினார்கள்.

இதில் நடால் 6-4, 7-5, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 2 மணி 46 நிமிட நேரம் தேவைப்பட்டது. 3 முறை அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்ற நடால் 8-வது முறையாக இந்த போட்டி தொடரில் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார்.

முதல்நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா), 3-ம் நிலை வீரரான பெடரர் (சுவிட்சர்லாந்து) ஆகியோர் வெளியேறி உள்ள நிலையில் நடால் மட்டும் தொடர்ந்து களத்தில் உள்ளார்.

மற்றொரு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 13-வது வரிசையில் உள்ள மான் பில்ஸ் (பிரான்ஸ்)- 25-ம் நிலை வீரரான மேட்டேரி பெரிட்டினி (இத்தாலி) மோதினார்கள். இதில் மான் பில்ஸ் அதிர்ச்சிகரமாக தோற்றார்.

பெரிட்டினி 3-6, 6-3, 6-2, 3-6, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் கடும் போராட்டத்துக்கு பிறகு மான் பில்சை வீழ்த்தினார்.

பெரிட்டினி முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார். இந்த ஆண்டு நடந்த போட்டியில் விம்பிள்டனில் 4-வது சுற்றில் நுழைந்ததே அவரது சிறந்த நிலையாக இருந்தது.

அரையிறுதி ஆட்டத்தில் நடால் - பெரிட்டினி மோதுகிறார்கள். மற்றொரு அரையிறுதியில் மெட்வதேவ் (ரஷியா)- டிமிட்ரோவ் (பல்கேரியா) மோதுகிறார்கள்.

பெண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 12-வது வரிசையில் உள்ள பெலிண்டா பென்சிக் (சுவிட்சர்லாந்து)- 23-ம் நிலை வீராங்கனையான டோனா வெகிச் (குரோஷியா) மோதினார்கள்.

இதில் பென்சிக் 7-6 (7-5), 6-3 என்ற நேர்செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். அவர் முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் அரையிறுதிக்கு தகுதி பெற்று இருக்கிறார். இதற்கு முன்பு 2014-ம் ஆண்டில் அமெரிக்க ஓபனில் காலிறுதிக்கு நுழைந்து இருந்ததே சிறந்த நிலையாகும்.

பென்சிக் அரை இறுதியில் 15-வது வரிசையில் உள்ள பினாக்காவுடன் (கனடா) இன்று மோதுகிறார். பினாக்கா ஆணட்ரீஸ்கு கால்இறுதியில் 3-6, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் 25-ம் நிலை வீராங்கனையான எலிஸ் மெர்டன்சை (பெல்ஜியம்) வீழ்த்தி முதல் முறையாக கிராண்ட்சிலாம் அரையிறுதிக்கு நுழைந்தார்.

நாளை நடைபெறும் அரை இறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா)- சுவிட்டோலினா (உக்ரைன்) மோதுகிறார்கள்