14 அக்., 2019

தமிழ் தேசிய கட்சிகள் கைச்சாத்திட்ட ஆவணம் வெளியானது

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக் கழகங்களின் மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்த கலந்துரையாடல் இன்று (14) ஐந்தாவது நாளாக நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் இன்றைய தினம் மாலை 6.30 மணிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த ஐந்து கட்சிகள் இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டதை அடுத்து ஏனைய ஐந்து கட்சித் தலைவர்கள் ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைக்கப்படவுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் தயாரித்த கோரிக்கை ஆவணத்தில் கையெழுத்திட்டிருந்தனர்.

பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய குறித்த ஆவணம் வெளியிடப்படுள்ளது. குறித்த விபரங்கள் வருமாறு,