புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 அக்., 2019

பிரதி துணைவேந்தராக பேராசிரியர் சிறீசற்குணராஜா

யாழ்.பல்கலைக்கழக பிரதி துணைவேந்தராக பேராசிரியர் எஸ்.சிறீசற்குணராஜாவை நியமிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஒக்டோபர் மாதத்துக்கான முதலாவது கூட்டத்திலேயே பேராசிரியர் எஸ். சிறீசற்குணராஜாவை யாழ்.பல்கலைக்கழக பிரதித் துணைவேந்தராக நியமிப்பதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற யாழ்.பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில் பேராசிரியர்களான எஸ். சிறிசற்குணராஜா, கே. மிகுந்தன் ஆகியோரின் பெயர்களை யாழ். பல்கலைக்கழக பிரதித் துணைவேந்தர் பதவிக்காக முன்மொழிந்து, அவர்களின் பெயர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

இந்தநிலையில் யாழ். பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரியினால் பரிந்துரைக்கப்பட்ட இருவரில் ஒருவரான பேராசிரியர் எஸ். சிறீசற்குணராஜாவை யாழ்.பல்கலைக்கழக பிரதித் துணைவேந்தராக நியமிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளனர்.

இந்தத் தீர்மானம் எதிர்வரும் 24ஆம் திகதி, வியாழக்கிழமை இடம்பெறவுள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஒக்டோபர் மாதத்துக்கான இரண்டாவது கூட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டு நியமனம் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ad

ad