புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 அக்., 2019

கெஞ்சினோம்! அது நடக்கவில்லை க.குமார் ஆதங்கம் விடாப்பிடியில் கஜன் குமார் மாணவர்கள் எதையோ நினைத்த பொரிமாத்தோண்டி கதை கஜானா

இடைக்கால ஒற்றை ஆட்சிக்கான யோசனையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிராகரிக்கிறது எனும் குறிப்பையாவது பதிவு செய்யுங்கள், அப்படியானால் நாம் ஆவணத்தில் கைச்சாத்திடுவோம் என வலியுறுத்தினோம். கெஞ்சினோம். ஆனால் அது நடக்கவில்லை. எங்களை திட்டமிட்டு ஓரங்கட்டியுள்ளனர் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திகுமார் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக் கழகங்களின் மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்த கலந்துரையாடல் இன்று (14) ஐந்தாவது நாளாக நடைபெற்றது.பல்கலை மாணவர்களும் கென்சினார்கள் விடாப்பிடியாக கஜன் இடைக்கால வரைபு பகிஷ்கரிப்ப என்றெல்லாம் நிபந்தனைகளை வைத்து விளக்கவே நைனார் என்கிறார்கள்



இக்கலந்துரையாடலில் இன்றைய தினம் மாலை 6.30 மணிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த ஐந்து கட்சிகள் இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டதை அடுத்து ஏனைய ஐந்து கட்சித் தலைவர்கள் ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைக்கப்படவுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் தயாரித்த கோரிக்கை ஆவணத்தில் கையெழுத்திட்டிருந்தனர்.

இந்நிலையிலேயே ஊடங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்தார். மேலும்,

நான் மக்களுக்கு எச்சரிக்கிறேன். இந்த ஐந்து கட்சிகளையும் நம்பி வரப்போகும் தேர்தலில் முடிவெடுத்தால் இனத்திற்கு கிடைக்ககூடிய பேரம் பேசி உரிமைகளை மட்டுமல்ல அன்றாட பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய சந்தர்ப்பங்களையும் நாம் கைவிடுவதாகவே அமையும்.



நாம் போலி ஒற்றமையைக் காட்டி பதவிகளை பெற்று மக்கள் ஏமாற்றத் தயாரில்லை.

சிங்கள கட்சிகளும், சிங்க பேரினவாத தரப்புக்களும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கத் தயாராக இருந்த மரியாதையைக் கூட இந்தக் கட்சிகள் தமிழ் தேசிய முன்னணிக்குத் தரவில்லை. - என்றார்.

ad

ad