புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

14 அக்., 2019


கோடிகளில் மயங்கும் கொள்கை (கொள்ளை ) கட்சிகள் -தமிழ் தேசிய மக்கள்முன்னணியின் சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் கோத்தாவுடன் கைகோர்ப்பு

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் ப.ஜெயகாந்தன், பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் ப.ஜெயகாந்தன், பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இன்று காலை அவரது நகர வட்டாரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கோத்தாபய ராஜபக்சவிற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்வது தொடர்பாக, வட மாகாண முன்னாள் ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி நடத்திய விசேட கலந்துரையாடலில் அவர் இணைந்து கலந்துகொண்டார்.

இதன்போது சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஜெயகாந்தன் தலைமையில் கோத்தாபய ரஜபக்சவிற்கு பிரச்சாரப் பணிகளை முன்னெடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலை தமிழ் தேசிய மக்கள் முன்னணி பகிஸ்கரிக்க முடிவெடுத்துள்ள நிலையில் அக்கட்சியின் நகரசபை உறுப்பினர் கோத்தாபய ராஜபக்சவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்