புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 அக்., 2019

தமிழீழம் தர மாட்டேன் சஜித் பிரேமதாச திட்டவட்டம்.

தமிழீழம் தர மாட்டேன் சஜித் பிரேமதாச திட்டவட்டம்.
இன மத ரீதியிலான முரண்பாடுகளுக்கு இனிவரும் காலங்களில் இடமளிக்கப்படமாட்டாது. அதேவேளையில் இந்நாட்டில் சிறுபான்மையின மக்கள் ஒன்று இல்லை. இந்நாட்டிலுள்ள எல்லா மக்களும் சமனாகும். தன்னுடைய காலத்தில் சிறுபான்மை என்ற சொல்லுக்கு இடமளிக்கப் போவதில்லை. எல்லோரும் இந்நாட்டு மக்களாகும். எந்த சமயங்களையும் நிந்தனை செய்ய இடமளிக்கப் போவதில்லை என்பதுடன் பௌத்த சமயம் மிகவும் உன்னதமான சமயமாகும். அந்த சமயத்தின் ஒழுக்க நெறி முறையில் நின்று ஏனைய சமயங்களையும் சமனாக மதித்து மனிதநேயத்துக்கு முன்னுரிமையளித்து பாக்கிஸ்தான் நாட்டுப் பிரதமர் இம்ரான் கானின் தலைமைத்துவப் பண்புகளுக்கு இணங்க தானும் புது யுகமான நாட்டை உருவாக்குவதற்காக அதிகபட்ச அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச எம்மிடம் உறுதியளித்துள்ளதாக மக்கள் முன்னேற்றக் கூட்டணியின் பொதுச் செயலாளர் நாயகம் கணேஸ்வரன் வேலாயுதம் தெரிவித்தார்.
மக்கள் முன்னேற்றக் கூட்டணியின் பொதுச் செயலாளர் நாயகம் கணேஸ்வரன் வேலாயுதம் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் ராஜகிரியவிலுள்ள ரோயல் பாக்கிலுள்ள ஜனாதிபதி வேட்பாளரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச அவர்களுடைய இல்லத்தில் தமிழ் மக்கள் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் முன்னேற்றக் கூட்டணியின் பொதுச் செயலாளர் நாயகம் கணேஸ்வரன் வேலாயுதம் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் போது இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் இந்நாட்டில் பாக்கிஸ்தான் நாட்டுப் பிரதமர் இம்ரான் கான் போன்ற தொரு நல்ல தலைவர் வருவதற்கு 10 வருடம் எடுக்கலாம் என்று நான் மனதில் கருதியிருந்தேன். ஆனால் உண்மையிலேயே ஜயாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடைய இல்லம் சென்று பார்த்தவுடன் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. எம்மைப் போன்று சாதாரண ஓர் இல்லத்தில் வாழ்ந்து வருகின்றார். அவர் அப்போது தான் கூட ஒரு இம்ரான் கான் மாதரியான தலைவராக செயற்பட இருக்கின்றேன் என்று எம்மிடம் கூறினார். உண்மையிலேயே நாங்கள் அந்த வார்த்தையை கேட்டதும் எல்லோரும் ஆச்சரியத்துடன் இரட்டிப்பு மகிழ்;ச்சி அடைந்தோம்.
இலங்கை நாட்டின் இறையாண்மையுடன் உயர்ந்த பட்ச அதிகார பகிர்வை ஏற்படுத்தி அமைதி, நல்லிணக்கம், நிலைபேறான ஸ்தீரத்தன்மை கொண்ட நாடொன்றை உருவாக்குவதற்கான உறுதியான எண்ணப்பாடுகள் அவரிடம் உள்ளன. தன்னுடைய தந்தை தமிழ் மக்களுக்கு எதை தீர்வாக வழங்க இருந்தோரோ அந்த தீர்வை தான் தமிழ் மக்களுக்கு வழங்கத் தயாராக இருக்கின்றேன். குறிப்பாக தன்னுடைய தந்தை அன்று கூறியபடி ‘ ஈழம்தர மாட்டேன். மற்றைய எல்லாம் தருவேன்’ என்று தமிழில் கூறினார் என அவர் எம்மிடம் தெரிவித்தார்.
நிச்சயமாக அதனை பொறுப்புடன் நிறைவேற்றக் கூடிய திறனும் வல்லமையும் இருப்பதை இயல்பாகவே நாம் அவரிடம் காண்கின்றோம்.
வெற்றிபெற்றாலும் ஜனாதிபதி மாளிககைக்கு செல்வதில்லை. நான் வசிக்கின்ற இல்லத்திலேயே தம்முடைய கடமைகளைக் மேற்கொள்ள இருப்பதாக வலியுறுத்திக் கூறிய அவர் இலங்கையிலுள்ள ஜனாதிபதி மாளிகைள் எல்லாம் சர்வதேச தரத்திலான தகவல் தொழில் நுட்ப பல்கலைக்கழகமாகவும், கணணி ஆய்வு ஆராய்ச்சி கூடங்களாகவுமாகவும் மாற்றியமைக்கவுள்ளேன் எனவும் வடக்கு கிழக்கு உட்பட்ட நாடளாவிய ரீதியில் ஒரே சமனான வகையில் எல்லாயின மக்களும் நிம்மதியுடன் வாழ்வதற்கான முன்னேற்றகரமான பணிகளை மேற்கொள்ளவுள்ளோம் எனவும் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சாகல ரத்நாயக, சாகல, சின்னத்துரை செல்வேந்தர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

ad

ad