புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

9 அக்., 2019

சஜித்துடன் போகொல்லாகம - கோத்தாவுடன் துமிந்த, முஸம்மில்


முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ரோஹித போகொல்லாகம ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளார்
அதேவேளை, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயரும் மேல் மாகாண ஆளுநருமான ஏ.ஜே.எம்.முசம்மில் ஆகியோர் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக இன்று அறிவித்துள்ளனர்.
இதனிடையே, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் பிரதி அமைச்சர் டபிள்யூ பி. ஏக்கநாயக்க, கடந்த வாரம் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்திருந்த நிலையில் இன்று கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார்.