புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 நவ., 2019

பிரான்ஸ் பேருந்து விபத்தில் இலங்கையர்களும் சிக்கினர்

பிரான்சில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற பேருந்து நேற்று விபத்துக்குள்ளானதில் இலங்கையர்கள் உள்ளிட்ட பலர் காயமடைந்துள்ளனர்.
பிரான்சில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற பேருந்து நேற்று விபத்துக்குள்ளானதில் இலங்கையர்கள் உள்ளிட்ட பலர் காயமடைந்துள்ளனர்.

ஐரோப்பா முழுவதும் பேருந்து சேவை வழங்கி வரும் ஜேர்மனி-யின் FlixBus நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்து, 33 பேருடன் பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலிருந்து, பிரித்தானியா தலைநகர் லண்டனுக்கு புறப்பட்டுள்ளது.

வடக்கு பிரான்ஸ் Somme, Saint-Quentin அருகே ஏ1 மோட்டார் பாதையில் சென்று கொண்டிருந்த போது மழை மற்றும் காற்று காரணமாக சறுக்கிய பேருந்து, சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வேலியை உடைத்துக்கொண்டு தாறு மாறாக உருண்டு சென்றுள்ளது.

இந்த கோர விபத்தில் பேருந்தின் பெண் ஓட்டுநர் உட்பட 32 பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பேருந்தில் இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா, ஸ்பெயின், அவுஸ்திரேலியா, ருமேனியா, மொரீஷியஸ், ஜப்பான் மற்றும் இலங்கை ஆகிய ஒன்பது நாடுகளை சேர்ந்தவர்கள் பயணித்துள்ளனர். பேருந்தில் 10 பிரித்தானியர்கள் பயணித்ததை உள்ளுர் பொலிசார் உறுதி செய்துள்ளனர்.

சம்பவம் குறித்து பொலிசர் வெளியிட்டுள்ள தகவலில், காயமடைந்த பலருக்கு சம்பவ இடத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது மற்றவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். நான்கு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது என கூறினர்.

பயங்கர விபத்தை அடுத்து மீட்பு பணிக்காக அவசர சேவை, 50 தீயணைப்பு வீரர்கள், 30 பொலிசார் மற்றும் 10 ஆம்புலன்ஸ் சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளனர். பேருந்திற்குள் சிக்கிய பயணிகளை வாகனத்தின் பின்புறுத்தில் துளையிட்டு மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர். விபத்திற்கான காரணம் குறித்து பிராந்திய பொலிசார் விசாரணை முன்னெடுத்துள்ளனர்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர்களை தவிர்த்து மற்ற பயணிகள் அனைவரும், FlixBus அனுப்பிய மற்றொரு பேருந்து மூலம் லண்டன் பயணித்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்டவர்கள் குறித்து தகவல் அறிய உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad