புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

7 நவ., 2019

கோத்தா வந்ததும் தூக்குவேன்- பிஎச்ஐயை மிரட்டிய ஈபிடிபி

கோத்தாபய ஆட்சிக்கு வந்ததும் உம்மைத் தூக்குவேன் என்று கரவெட்டி பிரதேச சபையின் ஈ.பி.டி.பி உறுப்பினர், பொது சுகாதார பரிசோதகரை அச்சுறுத்தியுள்ளார். இதையடுத்து, ஈ.பி.டி.பி உறுப்பினர், கைது செய்யப்பட்டார்.
கோத்தாபய ஆட்சிக்கு வந்ததும் உம்மைத் தூக்குவேன் என்று கரவெட்டி பிரதேச சபையின் ஈ.பி.டி.பி உறுப்பினர், பொது சுகாதார பரிசோதகரை அச்சுறுத்தியுள்ளார். இதையடுத்து, ஈ.பி.டி.பி உறுப்பினர், கைது செய்யப்பட்டார்.

கொற்றவத்தை பகுதியில் டெங்கு நுளம்பு பெருக்கம் தொடர்பில் சோதனை செய்வதற்கு கரவெட்டி பிரதேச சபை பொதுச் சுகாதார பரிசோதகர் நேற்றுமுன்தினம் அங்கு சென்றுள்ளார். அவர் கடமையைச் செய்ய விடாது கரவெட்டி பிரதேச சபையின் ஈபிடிபி உறுப்பினர் இடையூறு விளைவித்துள்ளார். ஒரு கட்டத்தில் கோத்தாபய ஆட்சிக்கு வந்ததும் உம்மைத் தூக்குவேன் என்று பிரதேச சபை உறுப்பினர் எச்சரித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொதுச் சுகாதார பரிசோதகரால் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் பிரதேச சபை உறுப்பினரை அழைத்து விசாரித்த பொலிஸார், அவரைக் கைது செய்து பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.

சம்பவம் தொடர்பில் ஆராய்ந்த பருத்தித்துறை நீதிவான், பிரதேச சபை உறுப்பினரை ஒரு இலட்சம் ரூபா பிணையில் விடுவித்து வழக்கு விசாரணை ஒத்திவைத்தார்