புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

15 நவ., 2019

Hit News
-----------------
இரண்டாக உடைந்தது ரெலோ- அதிரடியாக சிறிகாந்தா கட்சியிலிருந்து நீக்கம்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ரெலோவின் தலைமைக் குழு கூடி சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதென முடிவெடுத்திருந்த நிலையில் ரெலோவின் ஒருபிரிவினரிடத்தில் இவ்விடயம் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் சிறிகாந்தாவும் அவருடன் நெருக்கமாக செயற்படும் ரெலோ உறுப்பினர்களும் ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கத்தை ஆதரிப்பது என்ற முடிவை எடுத்து அவருக்கு ஆதரவாக பிரச்சாரங்களிலும் ஈடுபட்டுவந்தனர்.

இவ்விடயம் தொடர்பில் ரெலோவின் ஒருபகுதியினர் சிறிகாந்தவினதும் அவர் சார்பானவர்கள் மீது கடும் விமர்சனத்தை முன்வைத்து வந்தனர் இந்நிலையில் இன்றையதினம் 14.11.2019 வவுனியாவில் அவசரமாக கூடிய பதினொரு பேர் கொண்ட ரெலோவின் உயர்மட்ட குழு கட்சியின் செயலாளர் பதவியிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் சிறிகாந்தாவை அதிரடியாக நீக்கியது.

மேலும் கட்சியின் உபதலைவராக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் விந்தனையும் கட்சியின் செயலாளராக பிரசன்னாவையும் நியமித்துள்ளது.

இவ்விடயம் சிறிகாந்தா தரப்பினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் எதிர்காலத்தில் சிறிகாந்தா தலைமையிலான ஓர் அணி ஈபிஆர்எல்எப் உடனும் விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியுடனும் இணைந்து செயற்பட உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது