புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜன., 2020

52 எண்ணைப் போன்று 290 எண்ணும் நினைவிருக்க வேண்டும் - ஈரான் அதிபர் எச்சரிக்கை
52 என்ற எண்ணைக் குறிப்பிடும் டொனால் டிரம்பிற்கு 290 என்ற எண்ணும் நினைவிருக்க வேண்டும் என ஈரான் நாட்டு அதிபர் ஹசன் ரவுகானி
எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரானில் உள்ள 52 முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்துவோம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அவர் இக்கருத்தினை தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



ஈரான் நாட்டுக்கு ஒருபோதும் மிரட்டல் விடுக்க வேண்டாம் என டொனால்ட் டிரம்புக்கு எச்சரித்துள்ளார். அத்துடன் #IR 655 என்று ஹாஸ்டெக் செய்துமுள்ளார்.

1979 ம் ஆண்டு ஈரான் தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்த அதிகாரிகள் (அமெரிக்க குடிமக்கள்) 52 பேர் ஈரானியர்களால் ஓராண்டுக்கும் மேலாக பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டனர். அதை குறிப்பிட்டே 52 இடங்களில் தாக்குதல் நடத்துவோம் என டிரம்ப் தெரிவித்ததாக கூறப்பட்டது.

அதேபோன்று 1988ம் ஆண்டு ஜூலை மாதம் வளைகுடா பகுதியில் சென்று கொண்டிருந்த ஈரானிய விமானம் (ஈரான் ஏர் 655) அமெரிக்க போர்க்கப்பலால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் 66 குழந்தைகள் உள்பட 290 பேர் கொல்லப்பட்டனர். இதை குறித்தே தற்போது 290 என்ற எண்ணை அமெரிக்கா நினைவில் கொள்ள வேண்டும் என ஹசன் ரவுகானி எச்சரித்தாகக் கூறப்படுகிறது.

ad

ad