புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஜன., 2020

சிறிலங்கா ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை குறித்து த.தே.கூ.வினர் கவலை

சிறிலங்கா ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையில் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை தொடர்பாகவோ அதற்கான தீர்வுகள் தொடர்பாகவோ எந்த விடயமும் குறிப்பிடப்படால் இருந்தமை கவலையளிக்கின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை நாடாளுமன்ற எதிர்க்கட்சி காரியாலயத்தில் சந்தித்தி கலந்துரையாடியமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

சிறிலங்கா ஜனாதிபதியின் கொள்கைப்பிரகடன உரையில் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை தொடர்பாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஒற்றையாட்சிக்கான நிகழ்ச்சி நிரல், பெளத்த மதத்தை வளர்ப்பதற்கான நடவடிக்கைகள் அவரது பேச்சில் இருந்தன. ஆனால் ஏனைய மதங்கள் தொடர்பாகவோ அவற்றுக்கு இருக்கும் பிரச்சினை தொடர்பாகவோ எந்த விடயமும் பேச்சில் இருக்கவில்லை. இனங்களுக்கான பிரச்சினைகளை தள்ளிவைத்து நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் இணைந்து செயற்படவேண்டும் என சிறிலங்கா ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

ஆனால் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்ந்தும் நீர்பூத்த நெருப்பாகவே இருந்துவருகின்றது. அதனால் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக எதுவும் சிறிலங்கா ஜனாதிபதியின் உரையில் இல்லாமல் இருந்தமை கவலைக்குரிய விடயமாகும் என்று கூறினார்.

ad

ad