புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

11 ஜன., 2020

வங்குரோத்து அரசியல் செய்யும் ஒட்டுக்குழுக்கள்-வைத்தியர் ப.சத்தியலிங்கம்
தமிழ் அரசுக் கட்சியின் ஆயுட்கால உறுப்பினரும் முன்னாள் நகரசபை உறுப்பினருமான ஆசிரியர் ஒருவரது கைதை சாட்டாக வைத்து வங்குரோத்து அரசியல் நடத்தும் ஒட்டுக்குழுகள் சில எமது கட்சியினுடைய நன்மதிப்பிற்கு கழங்கம் ஏற்படுத்தும் வகையில் முகவரியற்ற இணையத்தளங்களினூடாக பொய்யான பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளன.– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட கிளைத் தலைவரும் வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சருமான வைத்தியர் ப.சத்தியலிங்கம் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவரது முகநூல் பக்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-

கடந்த காலங்களில் கொள்ளை, பாலியல் துஸ்பிரயோகங்கள், கப்பம் பெறுதல், போதைவஸ்து வியாபாரம், காட்டிக்கொடுத்தல், காணாமல் ஆக்கப்டுதல் மற்றும் கொலை போன்ற பாதகங்களில் ஈடுபட்ட அல்லது இக்குற்றங்களிற்கு துணை போனவர்களே முகவரியற்ற இணையத்தளங்களினூடாக எமக்கெதிரான பிரச்சாரங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
சம்பந்தப்பட்ட ஆசிரியர் தனது ஆசிரியத்தொழிலுக்கு முற்றிலும் ஒவ்வாத வகையில் நடந்திருந்தால் அதை தமிழரசுக் கட்சியினராகிய நாம் மிகவும் வன்மையாகக் கண்டிப்பதோடு முறையான பக்கச்சார்பில்லாத விசாரணை நடத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என கோரிநிற்கின்றோம்.

சம்மந்தப்பட்ட ஆசிரியர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு இலங்கைக்குடியரசின் சட்டதிட்டங்களின் அடிப்படையில் விசாரிக்கப்படுவதாக அறிகின்றோம். சம்மந்தப்பட்ட ஆசிரியர் எமது கட்சியினுடைய உறுப்பினராக இருந்தபோதும் அவருடைய கைது மற்றும் விசாரணை நடவடிக்கையில் எமது தலையீடு இருந்ததில்லை, இருக்கவும் முடியாது.
இன்று கூடிய வவுனியா மாவட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி மாவட்டக்கிளையானது சம்மந்தப்பட்ட உறுப்பினரை நீதித்துறை விசாரனைகள் முடிவுறும் வரை கட்சியில் இருந்து இடைநிறுத்துவதோடு கட்சியினது ஒழுக்காற்று விசாரனையை நடத்தி நீதியை நிலை நிறுத்துமாறு தலைமையை கோரியுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் எமது கட்சியினது வளர்சியையும் வெற்றிவாய்ப்பையும் சகிக்கமுடியாத தமிழின விரோதிகளின் பொய்ப்பிரசாரத்திற்கு எமது மக்கள் தகுந்த பாடத்தை கற்பிப்பார்கள் என்பதை விரைவில் அவர்கள் உணர்ந்து கொள்வார்கள்