புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 பிப்., 2020

ஒரு லட்சம் வாத்துகளை அனுப்பி பாகிஸ்தானுக்கு உதவும் சீனா.

ஒரு லட்சம் வாத்துகளை அனுப்பி பாகிஸ்தானுக்கு உதவும் சீன
பாகிஸ்தானில் விவசாய நிலங்களை அழித்துவரும் வெட்டுக்கிளிகளை ஒழிக்க ஒரு லட்சம் வாத்துகளை அனுப்புகிறது சீனா.

சமீபகாலங்களில் வெட்டுகிளிகளின் படையெடுப்புகள் மூலம் பல நாடுகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் நாசமடைந்து உள்ளன.குறிப்பாக கென்யா, எத்தியோப்பியா, சோமாலியா, தெற்கு சூடான் உள்ளிட்ட ஆப்ரிக்க நாடுகளில் லட்ச்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுத்து விவசாய நிலங்களை பாழாக்கின.

image

இங்கிருந்து பரவி பாகிஸ்தானில் உள்ள சிந்து,பலுசிஸ்தான் உள்ளிட்ட மாகாணங்களில் வெட்டுக்கிளிகள் அங்குள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை பாழக்கி வருகின்றன. இதன் காரணமாக வெட்டுக்கிளிகளின் தாக்குதலை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தானில் வெட்டுகிளிகளால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க சீனா ஒரு லட்சம் வாத்துகளை அனுப்ப உள்ளது. இதற்காக நன்றாக பயிற்சி பெற்ற ஒரு லட்சம் மல்லார்டு இன வாத்துகளை அனுப்புகிறது சீனா. மற்ற வாத்து இனத்தை விட மல்லார்டு இன வாத்துகள் அளவில் பெரிதாகவும், அதிகம் திறன் வாய்ந்ததாகவும் உள்ளதால் இந்த வகை வாத்துகளை அனுப்புகிறது.

image

மேலும் ஒரு வாத்து 200 வெட்டுக்கிளிகளை உண்ணும் என்பதாலும்,கோழிகளை விடவும் வாத்துகளை நிர்வகிப்பது மிகவும் எளிதாக இருப்பதாலும் மேலும் வாத்துகள் வெட்டுகிளிகளை அதிகம் உண்பதால் இந்த வாத்து படையை பாகிஸ்தானுக்கு அனுப்பவுள்ளதாகவும், இந்த படைக்கு குவோஷொவோ 1 எனும் வாத்து தலைமை தாங்கும் எனவும் ஜெஜியாங் வேளாண் ஆரய்ச்சி மையத்தின் ஆராய்சியாளர் ”லுலிஷி” தெரிவித்தார்.

கடந்த 2000 ஆம் ஆண்டு சீனாவின் ஷின்ஜியாங் மாகாணத்தை இதே போல வெட்டுக்கிளிகள் தாக்கிய போது, ஜெஜியாங் மாகாணம் வழியாக விமானம் மூலம் இந்த வாத்துப்படையை அனுப்பி வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ad

ad